ட்ரம்ப்பின் இந்திய விசிட் ! பின்னணியில் இருப்பது யார்?.

 

ட்ரம்ப்பின் இந்திய விசிட் ! பின்னணியில் இருப்பது யார்?.

இந்தியாவுக்கு ட்ரம்ப் விமானம் ஏறியது ஃபுளோரிடா மாநிலத்தில் இருக்கும் ஆண்ட்ரூ ஜாய்ண்ட் பேஸ் என்கிற ராணுவ விமான தளத்தில் தான். அங்கும் பத்திரிகையாளர்களிடம் பேசிய ட்ரம்ப் ” என் நன்பர் மோடி மில்லியன் கணக்கில் மக்களை திரட்டி என்னை கெடுத்து வைக்கப் போகிறார். அப்புறம் நம்ம ஊரில் திரளும் 60 ஆயிரத்தை எல்லாம் எப்படி மதிக்கப் போகிறேனோ’ என்று பெருமிதமாகப் பேசினார்.

மோடி ஆட்சியில் பல ஏற்பாடுகள் கமுக்கமாக நடப்பது வழக்கம்தான். ஆனால், அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசின் அதிபர் வருகையில் இத்தனை ரகசியங்கள் ஏன்?.

இந்தச் சந்தேகத்துக்கு அமெரிக்காவில் இருந்து இந்தியா கிளம்பும் முன்பே விதை போட்டது ட்ரம்ப்தான். என்னை வரவேற்க என் நண்பர் மோடி 70 லட்சம் பேரைத் திரட்டுகிறார் என்றார் ட்ரம்ப். அது வளர்ந்து வளர்ந்து ஒரு கோடி ( 10 மில்லியன்) ஆனது.

இந்தியாவுக்கு ட்ரம்ப் விமானம் ஏறியது ஃபுளோரிடா மாநிலத்தில் இருக்கும் ஆண்ட்ரூ ஜாய்ண்ட் பேஸ் என்கிற ராணுவ விமான தளத்தில் தான். அங்கும் பத்திரிகையாளர்களிடம் பேசிய ட்ரம்ப் ” என் நன்பர் மோடி மில்லியன் கணக்கில் மக்களை திரட்டி என்னை கெடுத்து வைக்கப் போகிறார். அப்புறம் நம்ம ஊரில் திரளும் 60 ஆயிரத்தை எல்லாம் எப்படி மதிக்கப் போகிறேனோ’ என்று பெருமிதமாகப் பேசினார்.

 

அகமதாபாத் நகரின் மொத்த மக்கள் தொகையே 70 லட்சம்தான் என்று சி.ஐ.ஏவுக்குத் தெரியாதா?.பான் கடைகளை மூடி, சாலையோரம் சுவர் வைத்து, வழியெல்லாம் வண்ணமடித்து 3 மணிநேர நிகழ்ச்சிக்கு  குஜராத் அரசு ஏன் 120 கோடி செலவிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் கேட்ட பிறகுதான் இந்திய வெளிவிவகார துறை அதிகாரி ரவீஸ் குமார் ஒரு அறிக்கை விடுகிறார். ‘அகமதாபாத்தில் அந்த மூன்று மணிநேர விழாவை நடத்தியது மத்திய அரசோ மாநில அரசோ அல்ல!.அதை நடத்தியவர்கள் டொனால்ட் ட்ரம்ப் நாக்ரிக் அபினந்தன் சமிதி என்கிற அமைப்பு’ என்று அந்த அறிம்கையில் சொல்கிறார்.

trump-in-india

அகமதாபாத்தில் கட்டப்பட்ட பேனர்களிலோ, ஒட்டப்பட்ட போஸ்ட்டர்களிலோ, கொடுக்கப்பட்ட பத்திரிகை விளம்பரங்களிலோ ஏன் அந்த அமைப்பின் பெயர் இல்லை. காங்கிரஸ் கட்சியின் சந்தீப் சர்ஜ்வாலா இன்னும் சிக்கலான ஒரு கேள்வியைக் கேட்டு வைத்திருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதியை இந்தியாவுக்கு அழைத்தது யார்?. அதை அமெரிக்கா ஒப்புக்கொண்டது எப்போது என்று.
இந்தக் கேள்விக்குப் பின்னால் பல.துணைக் கேள்விகள் இருக்கின்றன. 

apache-helicopter

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நெருங்குகிறது. அதற்கு நிதி வேண்டும். அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிக நிதி வழங்குவது அமெரிக்க ஆயுதத்தயாரிப்பு நிறுவனங்கள்தான். இந்தமுறை ட்ரம்ப்பின் விசிட்டின் நோக்கமே ஆயுத விற்பனைதான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவர்களிடம் இருந்து அப்பாச்சி, சீ ஹாக் ஹெலிக்காப்ட்டர்களை ஒரு முறை வாங்கிவிட்டால், அதற்கு உதிரிப் பாகங்கள், அதில் பயண்படுத்தும் ஆய்தங்கள் என்று அது ஒரு சங்கிலித் தொடர் வியாபாரம் ஆகிவிடும். ஆகவே ரவீஸ் குமார் குறிப்பிடும் அந்த ‘ டொனால்ட் ட்ரம்ப் நாக்ரீன் அபினந்தன் சமிதி’ என்கிற ரசிகர் மன்றம் அமெரிக்க ஆய்த வியாபார லாபியின் இந்திய பார்ட்னர்தான் என்று தெளிவாகத் தெரிகிறது. இங்குள்ள ஊடகங்களை மிரட்டி வைக்கலாம், ஆனால் அமெரிக்க ஊடகங்கள் விரைவில் இந்த கேள்விகளுக்கு விடை சொல்லும் என்று நம்பலாம்.