ட்ரம்பின் வருகைக்காக ரூ.100 கோடி செலவு செய்யும் குஜராத் அரசு!

 

ட்ரம்பின் வருகைக்காக ரூ.100 கோடி செலவு செய்யும் குஜராத் அரசு!

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வர வேண்டும் என பல்வேறு முறை பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.கடந்த ஆண்டே குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக ட்ரம்ப்  பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வர வேண்டும் என பல்வேறு முறை பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். கடந்த ஆண்டே குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக ட்ரம்ப்  பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ட்ரம்ப் வரவில்லை. இந்த நிலையில் வரும் 24 மற்றும் 25 ஆம் தேதி டெல்லி மற்றும் அகமதாபாத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் வரவுள்ளனர். அகமதாபாத்தில்
ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் “கேம் ச்சோ டிரம்ப்” என்னும் நிகழ்ச்சியிலும் ட்ரம்ப் கலந்துகொள்கிறார். ட்ரம்ப் வருகையையடுத்து அகமதாபாத் புதுப்பொலிவு பெற்றுள்ளது. அகமதாபாத் முழுவதும் அழகுச்செடிகள் நடப்பட்டுவருகின்றன. இதற்காக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

trump wife

 மோடியும் டிரம்ப்பும் பயணிக்கும் சாலையில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்காக 4 கோடி ரூபாயும், அவர்களின் பாதுகாப்பிற்கு 15 கோடியும், போக்குவரத்து செலவிற்காக 10 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அகமதாபாத்தில் அதிபர் டிரம்ப் தங்கியிருக்கும் 3 மணி நேரத்திற்கு 100 கோடி ரூபாய் செலவிட உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் டிரம்ப் பயணப்படும் சாலைகளை புதிதாக அமைக்கவும், செப்பணிடவும் 80 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் ஒருநாள் கூத்துக்கு இத்தனைக்கோடி தேவையா? என தங்களது ஆதங்கத்தை தெரிவித்துவருகின்றனர்.