ட்ரம்பின் சூட்கேசுக்குள் ஒளிந்திருக்கும் உலகப்போர்!

 

ட்ரம்பின் சூட்கேசுக்குள் ஒளிந்திருக்கும் உலகப்போர்!

அமெரிக்க அரசியல் சட்டப்படி அந்த நாட்டின் ஜனாதிபதிதான் கமாண்டர் இன் சீஃப்!.அந்த நாட்டின் தலைமை அதிகாரி அவர்தான்

அமெரிக்க அரசியல் சட்டப்படி அந்த நாட்டின் ஜனாதிபதிதான் கமாண்டர் இன் சீஃப்!.அந்த நாட்டின் தலைமை அதிகாரி அவர்தான்.அவர் ஒரு நாட்டின் மீது யாரிடமும் கேட்காமல் போர் அறிவிவிப்புச் செய்ய முடியும்.அமெரிக்கா தயாரித்து வைத்திருக்கும் சாதாரண மிசைல்களில் இருந்து ஐ.சி.பி.எம் எனப்படும் கண்டம் விட்டுக் கண்டம் கடந்து தாக்கும் அணு ஆயுதங்கள் வரை அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் சிச்சுவேஷன் ரூம் என்று ஒரு அறை இருக்கிறது. ஒசாமா பின்லாடனை பாகிஸ்தானில் போய் அமெரிக்க சீல் படை தாக்கியதையும்,அல்பாக்தாதியை நாயை விட்டு துரத்தவிட்டு கொன்றதையும் அமெரிக்க ஜனாதிபதிகள் சாட்டிலைட் உதவியுடன் உட்கார்ந்து பார்த்தது இந்த அறையில்தான்.ஒரு அவசர நிலை என்றால் அமெரிக்க ஜனாதிபதி இந்த அறையிக்கு வந்துதான் அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவிட வேண்டும்.ஆனால் இப்போது ட்ரம்ப் இந்தியா வருவதுபோல, ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கும்போது அப்படி ஒரு அவசரநிலை ஏற்பட்டால் என்ன செய்வது?.அதற்காகத்தான் ஒரு லெதர் சூட்கேஸ் அமெரிக்க ஜனாதிபதியின் கூடவே பயணம் செய்கிறது.அந்த சூட்கேசுக்கு நியூக்ளியர் ஃபுட் பால் என்று பெயர்.

ttn

அது ஒரு மினி கமாண்ட் செண்ட்டர்.அதன் கைப்பிடியில் இருக்கு சின்ன ஆண்டெனா மூலம் உலகின் எந்த இடத்தில் இருந்தும் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியிம்.அந்தப் பைக்குள் ஒரு அவசர நிலை என்றால் ஜனாதிபதியை அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைக்கும் 12 இடங்களின் விபரம் இருக்கும்.அதற்குள் பிளாக்புக் என்கிற பெயரில் 9 ×12 அங்குல அளவில் 75 பக்கங்கள் கொண்ட ஒரு நோட்டு இருக்கும்அதில் அவர் இருக்கும் இடத்தில் இருந்து உலகின் எந்த நாட்டையும் தாக்குவதற்கு ஏற்ற இலக்குலள் பட்டியல் இடப்பட்டு இருக்கும்.இதை ஜனாதிபதிதான் இயக்குகிறார் என்பதை உறுதி செய்யும் பிஸ்கட் என்கிற கோல்டன் கோட்கள் கொண்ட பிளாஸ்டிக் அட்டை ஆகியவை இருக்கும்.இந்த நியூக்ளியர் ஃபுட்பால் என்கிற சூட்கேஸ் பார்ப்பதற்கு பழைய தமிழ் படங்களில் வரும் டாக்டர் கையில் இருக்கும் தோல் பையைப் போல இருக்கிம்.ஜனாதிபதியின் எய்ட்.டி.கேம்ப் எனப்படும் ராணுவ உதவியாளர் கையில்தான் எப்போதும் இருக்கும்.அதாவது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வரும்போது,அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பெண்ட்டகனை ஒரு பையில் வைத்து எடுத்து வருகிறார்.

ttn

ஜனாதிபதிக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்ன செய்வது என்கிற முன்னேற்பாட்டில் துணை ஜனாதிபதி ,பாதுகாப்புத்துறை செயலாளர், பாதுகாப்புத்துறை துணைச் செயலாளர் ஆகியோரிடமும் இதே போன்ற ஒரு நியூக்ளியர் ஃபுட்பால் இருக்கிறது. இதைப் படிக்கும்போது உங்களுக்கும் இந்த சந்தேகம் தோன்றி இருக்கலாம்.வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் ஜனாதிபதிக்கு மனநிலை பிறழ்ந்து விட்டால்?.அப்படி நடந்தால் உலகப்போர்தான்.அப்படி நடக்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் 1973ல் இதே கேள்வியைக் கேட்ட ஹெரால்டு ஹெனிங் என்கிற கடற்படை அதிகாரியை பதவி நீக்கம் செய்துவிட்டது பெண்டகன்.