‘டோல் லேட்’டா மாறிய ‘டோல் கேட்’-FASTag முறையால் வரிசையில் நிற்கும் வாகனங்கள் -மத்திய அரசு ஒப்புதல்.. 

 

‘டோல் லேட்’டா மாறிய ‘டோல் கேட்’-FASTag முறையால் வரிசையில் நிற்கும் வாகனங்கள் -மத்திய அரசு ஒப்புதல்.. 

நம் நாட்டில் சுங்கச்சாவடிகளில் நிற்கும் வாகனங்கள் சீக்கிரம் செல்லவும் ,எரிபொருளை மிச்சப்படுத்தவும் ,கையில் cash கொண்டு செல்லாமலிருக்கவும் ,பரிவர்த்தனை பற்றி SMS கொடுக்கவும்  மத்திய அரசால் FASTag முறை கொண்டுவரப்பட்டது .

நம் நாட்டில் சுங்கச்சாவடிகளில் நிற்கும் வாகனங்கள் சீக்கிரம் செல்லவும் ,எரிபொருளை மிச்சப்படுத்தவும்,கையில் cash கொண்டு செல்லாமலிருக்கவும்,பரிவர்த்தனை பற்றி SMS கொடுக்கவும்  மத்திய அரசால் FASTag முறை கொண்டுவரப்பட்டது.

tolgate

 

இந்த ஃபாஸ்டேக் பயன்படுத்த எளிதானது,  இது  கட்டணங்களை தானாகக் கழிக்க உதவுகிறது மற்றும் பண பரிவர்த்தனைக்கு நிறுத்தாமல் டோல் பிளாசா வழியாக செல்ல உங்களை அனுமதிக்கிறது. FASTag ஒரு ப்ரீபெய்ட் கணக்கில் இணைக்கப்பட்டுள்ளது, அதில் இருந்து தேவையான  கட்டணத் தொகை தானாக  கழிக்கப்படுகிறது.  ரேடியோ-அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பத்தின் மூலம்  வாகனத்தின் விவரங்கள் விண்ட்ஸ்கிரீனில் ஒட்டப்படுகிறது.

tollgate

தேசிய நெடுஞ்சாலைகளில் தொந்தரவு இல்லாத பயணத்திற்கு ஃபாஸ்டாக் சரியான தீர்வாகும். ஃபாஸ்டாக் தற்போது தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 180 டோல் பிளாசாக்களில் செயல்படுகிறது. எதிர்காலத்தில் அதிகமான டோல் பிளாசாக்கள் ஃபாஸ்டாக் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு கூறியது .

ஆனால் இந்த FASTag முறையிலுள்ள குறை பற்றி நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்.பி .சஞ்சய்ராவத் ,” இப்போது இந்த FASTag முறை அமல்படுத்தப்பட்ட பிறகு,சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் அதிகரித்துள்ளது “என்றார்.இதை  மத்திய அமைச்சர் நிதின்கட்காரி  ஒப்புக்கொண்டுள்ளார் .