டோல் கட்டணம் கூடாது! – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

டோல் கட்டணம் கூடாது! – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

ட்விட்டரில் இன்று டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்களில் கூறியிருப்பதாவது:
“ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்  வரும் 20ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

வருகிற 20ம் தேதி முதல் மீண்டும் டோல் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
ட்விட்டரில் இன்று டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்களில் கூறியிருப்பதாவது:
“ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்  வரும் 20ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. 

பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான சூழலில் அத்தியாவசிய பொருட்கள், அவசர மருத்துவ சேவை உள்ளிட்டவற்றுக்கான வாகன போக்குவரத்து தொழிலை  மேற்கொண்டிருப்போருக்கு இதனால் பொருளாதார சுமை மேலும் அதிகமாகும்.

இதன் விளைவாக விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளாவார்கள். எனவே, தற்போதைய உத்தரவை ரத்து செய்வதோடு,  நாடு முழுவதும் இயல்புநிலை திரும்புகிற வரை  சுங்கக்கட்டண வசூலை நிறுத்திவைக்கவேண்டும்  என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.