டோல்கேட்டில் கட்டாய கேஷ்லெஸ்… பணம் செலுத்த ஒரே ஒரு லைன்தான்!

டோல்கேட்டில் கட்டாய கேஷ்லெஸ்… பணம் செலுத்த ஒரே ஒரு லைன்தான்!

வழிநெடுக உள்ள டோல்கேட்டால் வாகன ஓட்டிகள் கடும் எரிச்சளுக்குள்ளாகிறார்கள். அவர்களை மேலும் எரிச்சல்படுத்தும் வகையில் புதிய விதிமுறையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டோல்கேட்கள் அறிமுகம் செய்ய உள்ளனர். வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த டோல்கேட்டில் கட்டணம் செலுத்த மின்னணு பண பரிவர்த்தனையை அமல்படுத்த உள்ளனர். பணம் செலுத்தி டோல் வாங்க ஒரே ஒரு வரிசையை மட்டும் விட்டுவைத்துள்ளனர். 

tollgate

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் 48 டோல் பிளாசா உள்ளது. இந்த டோல் பிளாசாக்களில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய மண்டல அதிகாரி பிரவீன் குமார் கூறுகையில், “ஃபாஸ்டேக் என்பது எளிய நடவடிக்கை. வாகன ஓட்டிகள் ஃபாஸ்டேக் வாங்க வசதியாக பல வங்கிகளுடன் கூட்டுறவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. டோல் பிளாசாக்களிலேயே இந்த பாஸ்டேக் கார்டுகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் கூட இந்த கார்டை வாங்கிக்கொள்ளலாம். 1 ம் தேதி முதல் வாகனங்கள் இந்த டேக் இருப்பது கட்டாயம். 2014ம் ஆண்டு அறிவிக்கை அடிப்படையில், ஃபாஸ்டேக் (FASTags) இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்” என்றார். 

cashless

இந்த கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் கார்டு கணக்கில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டும். டோல்பிளாசாவுக்குள் நுழையும்போது தன்னாலேயே இவர்கள் ஃபாஸ்டேக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். தற்போது சோதனை அடிப்படையில் 35 டோல் பிளாசாக்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வாகனங்களுக்கு டேக் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த கார்டுகளை வாங்க விரும்பவில்லை. 30 சதவிகிதத்துக்கும் குறைவான வாகன ஓட்டிகளே இந்த கார்டை பயன்படுத்துகின்றனர் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர்.