டோர் டெலிவரி திருடன்..! லேட்டஸ்ட் ஸ்வாகா ஐடியா..!?

 

டோர் டெலிவரி திருடன்..! லேட்டஸ்ட் ஸ்வாகா ஐடியா..!?

மெயில் ஆர்டர்களும்,டோர்டெலிவரி சர்வீஸும் அதிகமான உடனே திருடர்களும் அப்டேட் ஆகிவிட்டார்கள்.அவர்கள் கண்டுபிடித்து இருக்கும் பிராண்ட்  நியூ ஃப்ராடு வேலையை பாருங்கள். ஏமாந்தவர் சாதாரண ஆளில்லை.மோசடிப் பேர்வழிகளின் ஃபூல் புரூஃப் ப்ளானைப் பாருங்கள். அடுத்த பலி நீங்களாகக்கூட இருக்கலாம்,உஷார்!

மெயில் ஆர்டர்களும்,டோர்டெலிவரி சர்வீஸும் அதிகமான உடனே திருடர்களும் அப்டேட் ஆகிவிட்டார்கள்.அவர்கள் கண்டுபிடித்து இருக்கும் பிராண்ட்  நியூ ஃப்ராடு வேலையை பாருங்கள். ஏமாந்தவர் சாதாரண ஆளில்லை.மோசடிப் பேர்வழிகளின் ஃபூல் புரூஃப் ப்ளானைப் பாருங்கள். அடுத்த பலி நீங்களாகக்கூட இருக்கலாம்,உஷார்!

courier

ஏமாந்த மிஸ்ட்டர் எக்ஸுக்கு ஞாயிற்றுக் கிழமை பிறந்தநாள் வர இருந்தது. அதற்கான ஷாப்பிங்கில் அவரும் மனைவியும் பிஸியாக இருக்கையில் மிஸ்ட்டர் எக்ஸுக்கு ஒரு ஃபோன் வந்தது.

“இந்தியாவில் உள்ள டாப் லெவல் கொரியர் கம்பெனியின் பெயரைச் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பேசறேன் உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு. எப்போ வீட்டுல இருப்பீங்க” என்று விசாரிக்க இவர்  “வீட்டு செக்யூரிகிட்ட குடுத்துடுங்க” என்று சொல்லியிருக்கிறார்.எதிர் தரப்பில் பேசிய ஆள் “இல்ல சார் நேர்ல உங்ககிட்டத்தான் தரமுடியும்” என்று கொரியர் காரர் சொல்ல எக்ஸ் ஒரு டைம் சொல்லி விட்டு மனைவியுடன் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

wine bottle

சொன்ன நேரத்துக்கு ஸ்மார்ட்டான யூனிஃபார்மில் ஒரு ஆள் கையில் ஒரு பார்சலுடன் வந்திருக்கிறான்.அது ஒரு விலையுயர்ந்த ஒயின் பாட்டில்,அதன் மேல் ‘ஹேப்பி பர்த்டே எக்ஸ்,நான் யாருன்னு கண்டுபிடி பார்க்கலாம்’ என்று எழுதி இருந்தது.

“இது சரக்கு பாட்டில் சார்,இத ஆள் தெரியாம குடுக்க முடியாது.யாராவது சின்ன பசங்க ஆர்டர் செஞ்சிருக்கலாம்ல அதுதான் நேர்ல வந்து குடுக்கறோம்” என்று சொல்ல எக்ஸுக்கு அவர்களது நேர்மையைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி.சரக்கு அனுப்பிய நண்பன் யாரு என்று யோசிக்க ஆரம்பித்தார்.

swipe machine

இப்போது டெலிவரி ஆசாமி,”சார்,இப்படி சரக்கு பாட்டில் அனுப்பினா நாங்க நேரா வந்து வெரிஃபை பண்றதுக்கு ஒரு ஒன் ஃபிட்டி சார்ஜ் பண்றோம்”என்று சொல்ல,மூவாயிரம் ரூபாய் பாட்டிலுக்கு 150 தானே என்று பணத்தை எடுத்து நீட்ட வந்தவன் அதை பணிவுடன் மறுத்துவிட்டு,”சாரி சார் நாங்க கேஷ் ஹேண்டில் பண்றதில்லை” என்று ஒரு செல்ஃபோன் சைசில்,கையகல ஸ்வைப்பிங் மிஷ்னை எடுத்து நீட்ட,எக்ஸ் தன் டெபிட் கார்டை எடுத்து நீட்டிவிட்டார்.

thinking

அவனும் வாங்கி ஸ்வைப் செய்து கொண்டு ரசீதும் கொடுத்துவிட்டு போய்விட்டான்.இரவெல்லாம் தனக்கு ஒயின் அனுப்பிய நண்பன் யாராக இருக்கும் என்று யோசித்தபடியே தூங்கிவிட்டார் மிஸ்டர் எக்ஸ்.

வந்து போன ‘கொரியர்  பாய்’ ஸ்வைப்பிங் மெஷின் மூலம் கார்டின் ரகசியங்களைத் திருடி,எக்சின் பர்த் டேவை விடிய விடியக் கொண்டாடித் தீர்த்திருக்கிறான்.

காலையில் எழுந்து மொபைலில் வந்த மெசேஜைப் பார்த்த எக்ஸ்க்கு பேரதிர்ச்சி! கொரியர் பாய் கொடுத்த ஒயினுக்கான விலை 60 ஆயிரம் என்று! ஸோ,உங்களுக்கு எப்ப பாஸ் பர்த் டே…