டோக்கியோ தமிழ்ச் சங்கத்துக்கு கீழடி ஆய்வு புத்தகம்! – மா.சுப்பிரமணியன் வழங்கினார்

 

டோக்கியோ தமிழ்ச் சங்கத்துக்கு கீழடி ஆய்வு புத்தகம்! – மா.சுப்பிரமணியன் வழங்கினார்

கீழடி தொடர்பாக ஜப்பானிய மொழியில் வெளியான ஆய்வு புத்தகத்தை டோக்கியோ தமிழ்ச் சங்க நிர்வாகிகளிடம் மா.சுப்பிரமணியம் வழங்கினார்.சென்னை மாநகர முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கீழடி தொடர்பாக ஜப்பானிய மொழியில் வெளியான ஆய்வு புத்தகத்தை டோக்கியோ தமிழ்ச் சங்க நிர்வாகிகளிடம் மா.சுப்பிரமணியம் வழங்கினார்.

 

சென்னை மாநகர முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு டோக்கியோ நகர தமிழ்ச் சங்க நிர்வாகிகளுடன் மா.சுப்பிரமணியம் உரையாடினார். அப்போது, கீழடி ஆய்வு தொடர்பாக, தமிழ், ஆங்கிலம், ஜப்பானிய மொழியில் வெளியான ஆய்வுக் கட்டுரை புத்தகத்தை அவர் வழங்கினார்.

mayar

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பண்டைக்காலத்திலேயே தமிழர்தம் கலாச்சாரம்,நாகரிகம்,வாழ்வியல் முறைகள் எந்த அளவிற்கு சிறந்திருந்தது என்பதை பறைச்சாற்றும் “கீழடி அகழ்வாராய்ச்சி”சம்பந்தப்பட்ட தமிழ்,ஆங்கிலம் மற்றும் ஜப்பான் மொழிகளில் வெளிவந்துள்ள நூல்களை அண்மையில் டோக்கியோ தமிழ் சங்கத்தினரிடத்தில் தந்து மகிழ்ந்தோம்..” என்று குறிப்பிட்டுள்ளார்.