டோக்கன் கொடுத்து ஏமாற்றியது போல் பரிசு கொடுத்து ஏமாற்ற முடியாது: டி.டி.வி.யை விமர்சித்த அ.தி.மு.க அமைச்சர்

 

டோக்கன் கொடுத்து ஏமாற்றியது போல் பரிசு கொடுத்து ஏமாற்ற முடியாது: டி.டி.வி.யை விமர்சித்த அ.தி.மு.க அமைச்சர்

டிடிவி  தினகரனுக்கு பரிசு சின்னம் கொடுக்கப்பட்டதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். 

சென்னை: டி.டி.வி  தினகரனுக்கு பரிசு சின்னம் கொடுக்கப்பட்டதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழக தேர்தல் களம்

mk stalin

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனுத் தாக்கல், பிரசாரம் என தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முன்னதாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரனுக்கு, மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கான சின்னம் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. 

அமமுக அங்கீகரிக்கப்படாத கட்சி

ec

இதனிடையே தினகரன் தரப்போ குக்கர் அல்லது தொப்பி சின்னத்துக்கு முட்டுக்கொடுத்து நிற்க, தேர்தல் ஆணையமோ அமமுகவை அங்கீகரிக்கப்படாத கட்சி, தனிநபர் மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே பொது சின்னம் ஒதுக்கப்படுகிறது. இந்த இரண்டு வகையிலும் அமமுக வராது என்று கூறி விடாப்பிடியாக தரமறுத்து  விட்டது. இதையடுத்து தற்போது டி.டி.வி தினகரனின் அமமுக கட்சிக்கு, பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கித் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினகரனாவது இந்தச் சின்னத்தை வைத்துக்கொண்டு ஜெயிப்பதாவது?

balaji

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆர்.கே நகர் தேர்தலில் டோக்கன் கொடுத்து ஏமாற்றினார். இந்த முறை பரிசு சின்னத்தைக் கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். தினகரனுக்கு பரிசுப் பெட்டி சின்னம் பொருத்தமானதுதான். ஆனால் கடந்த முறை ஏமாற்றியது போல இந்த முறை ஏமாற்ற முடியாது.அவருடைய சின்னத்தைத்  தமிழகம் முழுவதும் கொண்டு செல்வது கடினம். அதிமுக, திமுக என பெரிய கட்சிகள் இருக்கும்போது, தினகரனாவது இந்தச் சின்னத்தை வைத்துக்கொண்டு ஜெயிப்பதாவது? அவர் டெபாசிட் கூட வாங்க மாட்டார். இந்தத் தேர்தலுடன் மக்கள் டிடிவி தினகரன் கட்சிக்கு மூடுவிழா எடுப்பார்கள்’ என்று ராஜேந்திர பாலாஜி வழக்கம் போல் தனக்கே உரித்தான பாணியில் பேசி பட்டையைக் கிளப்பினார். 

முன்னதாக ராஜேந்திர பாலாஜியை தினகரன் ரௌடி போல செயல்படுவதாகவும், அவர் பேச்சும் கூட அப்படி தான் உள்ளது என்றும் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

இதையும் வாசிக்க: தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு : சாவல் விட்ட உதயநிதி; செய்து காட்டிய எடப்பாடி