டொயோட்டா வெல்ஃபயர் சொகுசுக் காரை டெலிவரி எடுத்த நடிகர் மோகன்லால்!

 

டொயோட்டா வெல்ஃபயர் சொகுசுக் காரை டெலிவரி எடுத்த நடிகர் மோகன்லால்!

நடிகர் மோகன்லால் டொயோட்டா வெல்ஃபயர் சொகுசுக் காரை டெலிவரி எடுத்துள்ளார்.

திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லால் டொயோட்டா வெல்ஃபயர் சொகுசுக் காரை டெலிவரி எடுத்துள்ளார்.

இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு டொயோட்டா வெல்ஃபயர் சொகுசுக் கார் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் ரூ.79.5 லட்சம் ஆகும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகப் பெரிய கார்களில் இதுவும் ஒன்று என்பதுடன், சொகுசு மற்றும் விசாலமான இடவசதி கொண்ட கார் என்ற பெருமைகளையும் டொயோட்டா வெல்ஃபயர் பெற்றுள்ளது.

ttn

இந்த நிலையில், நடிகர் மோகன்லால் டொயோட்டா வெல்ஃபயர் சொகுசுக் காரை டெலிவரி எடுத்துள்ளார். வெள்ளை நிற வெல்ஃபயர் காரை அவர் டெலிவரி எடுத்துள்ளார். இதன்மூலம் கேரளாவில் டொயோட்டா வெல்ஃபயர் காரை டெலிவரி எடுத்த முதல் நபர் என்ற பெருமையை மோகன்லால் பெற்றுள்ளார்.