“டேய்  வாடா… வாடா செருப்பை கழற்றிவிடுடா” : பழங்குடியினர் சிறுவனை தனது காலில் இருந்த செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

 

“டேய்  வாடா… வாடா செருப்பை கழற்றிவிடுடா” : பழங்குடியினர் சிறுவனை தனது காலில் இருந்த செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அப்போது அமைச்சருடன்  நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகிய அதிகாரிகள் உடனிருந்தனர். 

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியின சிறுவனை தன்னுடைய செருப்பை கழற்ற கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகள் புத்துணர்வு முகாமை  தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருகை புரிந்தார். அப்போது   புல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த திண்டுக்கல்  சீனிவாசன் செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. அப்போது அங்கிருந்த பழங்குடியின சிறுவனை சீனிவாசன், டேய்  வாடா வாடா செருப்பை கழற்றிவிடுடா என்று கூறி அழைக்கிறார். அப்போது அந்த சிறுவன் அங்கு வந்து அமைச்சர் சீனிவாசன் செருப்பை கழற்றிவிடுகிறார்.  அப்போது அமைச்சருடன்  நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகிய அதிகாரிகள் உடனிருந்தனர். 

ttn

இந்த சம்பவத்தின் போது  எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  தமிழக அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஓர் அமைச்சர் மனதில் சாதி பிரிவினை உள்ளது என்றும்  ஒரு தவறான முன்னுதாரணமாக அவர் உள்ளார் என்பதே  அமைச்சரின் செய்கையின் மூலம் தெளிவாகிறது. அதை அங்கிருந்த அதிகாரிகளும் கண்டிக்கவில்லை என்பது கண்டிக்கத்தக்கது.