டேய் முகினே… சாண்டி ஸ்டைலில் முகினை கலாய்த்த ஷெரின் அம்மா!

 

டேய் முகினே… சாண்டி  ஸ்டைலில் முகினை கலாய்த்த ஷெரின் அம்மா!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது  புரொமோ வீடியோ  வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது  புரொமோ வீடியோ  வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி 82 வது நாளை அடைந்துள்ளது. பிக் வீட்டில் இந்த வாரம்   ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. முகினின்  அம்மா நிர்மலா மற்றும் தங்கை ஜனனி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து தொடர்ந்து  லாஸ்லியாவின்  குடும்பத்தினர் வந்திருந்தனர். அதேபோல் நேற்று வனிதாவின் மகள்கள், தர்ஷனின் குடும்பம், சேரனின் அம்மா, தங்கை, மகள் ஆகியோர் வந்திருந்தனர். 

sherin

 
இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஷெரின் அம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். அப்போது லாஸ்லியாவிடம் ஹாப்பியா  இரு, எல்லாம் நல்லதா நடக்கும் என்றும் தர்ஷனை பார்த்து ஹவவ் ஆர் யூ ஹேண்ட்சம் என்று பேசுகிறார். பின்பு சாண்டியை பார்த்து, நீ ஷெரினுக்கு ரொம்ப டார்ச்சர் கொடுக்குற என்று கேட்க ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் சிரிக்கிறார்கள். அடுத்ததாக அவருடன் வந்த ஷெரினின் தோழியை முகின் வீட்டுக்குள் அழைத்து செல்ல, டேய் முகேன்னு, வேண்டாம்டா அபிராமி திட்டும்டா என்று சொல்ல ஷெரின் நான் சொல்லிருக்கேன்ல என் அம்மா வேற லெவல்’ என்று கூறுகிறார். 

 

முன்னதாக வெளியான புரொமோவில்  கவினின் நண்பர் மற்றும் சாண்டி குடும்பத்தினர் வந்தது குறிப்பிடத்தக்கது.