“டேய் உன்னால எனக்கு கொரானா வந்துடும் “முகமூடி அணிய மறுத்த மகன் – கழுத்தை அறுத்த தந்தை.. 

 

“டேய் உன்னால எனக்கு கொரானா வந்துடும் “முகமூடி அணிய மறுத்த மகன் – கழுத்தை அறுத்த தந்தை.. 

வடக்கு கொல்கத்தாவில் ஷோவபஜாரில் வசிக்கும் பன்ஷிதர் மல்லிக் என்ற 78 வயதான முதியவர் தனது 45 வயதான மாற்று திறனாளி மகன் தினமும் மாலையில் முகமூடி அணியாமல்  வெளியே ஊர் சுற்ற போகும்போதெல்லாம் முகமூடி அணிந்து போகுமாறு கூறுவார் .

கொரானாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு மத்தியில் முககவசம்  அணிய மறுத்த தனது மாற்று திறனாளி மகனை  78 வயதான தந்தை  கொலை செய்ததாக போலீசில் சரணடைந்தார் 

வடக்கு கொல்கத்தாவில் ஷோவபஜாரில் வசிக்கும் பன்ஷிதர் மல்லிக் என்ற 78 வயதான முதியவர் தனது 45 வயதான மாற்று திறனாளி மகன் தினமும் மாலையில் முகமூடி அணியாமல்  வெளியே ஊர் சுற்ற போகும்போதெல்லாம் முகமூடி அணிந்து போகுமாறு கூறுவார். ஆனால்  மகன் தந்தையின் பேச்சை மதிக்காமல் தினமும் மாஸ்க் போடாமல் வெளியே போய் வந்தார் .இதனால் கோபமுற்ற அவரின் தந்தை  மகனின்  கழுத்தை ஒரு துணியால்  இறுக்கி கொலை செய்தார் .பிறகு இரவு 7 மணியளவில் ஷியாம்புகூர் காவல் நிலையத்திற்குச் சென்று, அவர் தனது மகனை ஒரு துணியால்  கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறி சரணடைந்தார் .
இதைக்கேட்ட காவல் நிலையத்தின் பொறுப்பாளர், அதிகாரிகளுடன் முதியவரின் இல்லத்திற்கு விரைந்து சென்ற போது ,அங்கு  அவரது 45 வயது மகன் ஷிர்ஸெண்டு மல்லிக் இறந்து கிடப்பதைக் கண்டார்.
பிறகு அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
துப்பறியும் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று  ஆரம்ப விசாரணை நடத்தினர்.
பிறகு மல்லிக் கைது செய்யப்பட்டு  அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நகர காவல்துறை இணை ஆணையர் தெரிவித்தார்.