டெஸ்ட் போட்டியில் நடுவர்களுடன் தகராறு: ஸ்டூவர்ட் லா மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை

 

டெஸ்ட் போட்டியில் நடுவர்களுடன் தகராறு: ஸ்டூவர்ட் லா மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை

டெஸ்ட் போட்டியின் போது தகராறில் ஈடுபட்டதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி: டெஸ்ட் போட்டியின் போது தகராறில் ஈடுபட்டதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கைரன் பவல்(kieran powell) அவுட் ஆகியதைத் தொடர்ந்து, டிவி நடுவர் மற்றும் நான்காவது நடுவர் அறைக்குச் சென்று ஸ்டூவர்ட் லா தகாத முறையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனையடுத்து ஐசிசி நடத்திய விசாரணையில், நன்னடத்தை விதிகளை மீறியது உறுதியானதால், தகுதிப் புள்ளிகளில் மூன்று குறைக்கப்படுவதுடன், போட்டி ஊதியத்தில் 100 விழுக்காடு அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

மேலும், இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்தும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.