டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை புதுப்பித்துள்ள விராட் கோலி! சாதனை மேல் சாதனை..

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை புதுப்பித்துள்ள விராட் கோலி! சாதனை மேல் சாதனை..

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை மீண்டும் புதுப்பித்து இருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. அதன் சாதனை பட்டியல் பின்வருமாறு..

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை மீண்டும் புதுப்பித்து இருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. அதன் சாதனை பட்டியல் பின்வருமாறு..

1. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் விராட் கோலி. இவர் தற்போது ஏழாவது முறையாக இரட்டை சதம் அடித்திருக்கிறார்.

virat

2. உலக அளவில் நான்காவது அதிகபட்ச இரட்டை சதங்கள் ஆகும். 

#டான் பிராட்மேன் – 12 இரட்டை சதங்கள்.
# குமார் சங்ககரா – 11 இரட்டை சதங்கள் 
#பிரையன் லாரா – 9 இரட்டை சதங்கள்.

3. கேப்டனாக பொறுப்பில் இருந்துகொண்டு அதிகமுறை 150 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார் விராட் கோலி. இவர் 9 முறை 150 ரன்களை கடந்திருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் பிராட்மன் 8 முறை இதனை செய்திருக்கிறார்.

4. இவர் இதுவரை 6 டெஸ்ட் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்திருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் இதுவரை இரட்டை சதங்கள் அடிக்கவில்லை. இதுவும் தனிநபர் நிகழ்த்திய அதிகபட்ச சாதனை ஆகும் இதேபோல் குமார் சங்கக்கரா மற்றும் யூனிஸ் கான் ஆகியோர் 6 அணிகளுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து இருகின்றனர்.

5. இன்றைய போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்திருக்கிறார் விராட் கோலி.

-vicky