டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை மூலம் ஆணாக மாறிய பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா ? – வெளியான ஆய்வு முடிவுகள்

 

டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை மூலம் ஆணாக மாறிய பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா ? – வெளியான ஆய்வு முடிவுகள்

இயற்கைக்கு முரணாக பெண்ணிலிருந்து ஆணாக செயற்கையான முறையில் மாறினாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்ற ஆய்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 

இயற்கைக்கு முரணாக பெண்ணிலிருந்து ஆணாக செயற்கையான முறையில் மாறினாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்ற ஆய்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 

டெஸ்டோஸ்டிரோன் சுரப்பி சிகிச்சை

இயற்கை படைத்திருக்கும் அனைத்தையும் பரிசோதனை செய்யும் முயற்சியில் இறங்குவதே காலம் காலமாக மனிதர்களின் வேலையாக  இருக்கிறது. இத்தகைய பரிசோதனைகளில் முக்கியமான மைல்கல் தான் செயற்கை பாலின மாற்றம். 

டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை

செயற்கை பாலின மாற்றம் என்பது, இயற்கைக்கு முரணாக செயற்கையான முறையில் ஆண் பெண்ணாகவோ, பெண் ஆணாகவோ மாறுவது ஆகும். இவ்வகையில், பெண்ணிலிருந்து ஆணாக மாற்றிக்கொள்ள செயற்கையாக டெஸ்டோஸ்டிரோன் சுரப்பி உடலில் செலுத்தப்படும். ஆண்களைப் போன்ற உடலைப் பெறுவதற்கு டெஸ்டோஸ்டிரோன் சுரப்பி சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சுரப்பியின் காரணமாக இயற்கையாக பெண்ணாகப் பிறந்தவர் ஆணாக மாறுவார்.

குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா ?

இந்நிலையில், டெஸ்டோஸ்டிரோன் சுரப்பியை உடலில் ஏற்றிக் கொள்பவர்களின் கருப்பை ஓராண்டுக்குப் பின்னும் தொடர்ந்து இயங்குவதாக இஸ்ரேலிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை

இந்த ஆய்வின் போது 17 லிலிருந்து 40 வயதுக்கு உட்பட்ட 32 பேரைச் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனைகளின் முடிவில் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பி சிகிச்சை பெற்றுக் கொள்பவர்களின் கருப்பை ஓராண்டுக்குப் பின்னும் இயங்குகிறது என்பது முதல் முறையாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலினத்தைப் பெண்ணிலிருந்து ஆணாக மாற்றிக்கொண்டவர்கள் குழந்தை பெற விரும்பினால், அவர்களுக்கு ஆய்வின் முடிவுகள் உறுதுணை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க :

உலக புற்றுநோய் தினம்; முடியை தானம் செய்த பெண் செய்தியாளருக்கு குவியும் பாராட்டுகள்-வீடியோ

விதி ரேகைகளின் விளைவே விபரீத ராஜ யோகம்!