டெல்லி வன்முறை… போலீஸ் கமிஷனர் முன்னிலையில் பா.ஜ.க தலைவரின் பேச்சுதான் காரணமா? கைது செய்ய வலியுறுத்தல்

 

டெல்லி வன்முறை… போலீஸ் கமிஷனர் முன்னிலையில் பா.ஜ.க தலைவரின் பேச்சுதான் காரணமா? கைது செய்ய வலியுறுத்தல்

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக போராடி வருகிறார்கள். அமைதியான முறையில் போராடிவரும் அவர்களை அப்புறப்படுத்த பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் முன்னிலையில் பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ரா பேசியதுதான் டெல்லி வன்முறைக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

kapil-mishra

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக போராடி வருகிறார்கள். அமைதியான முறையில் போராடிவரும் அவர்களை அப்புறப்படுத்த பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர். இதனால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆதரவு போராட்டம் நடத்துபவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். அப்போது கபில் மிஸ்ரா, “அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்துள்ளதால் இந்த இடத்தைவிட்டு அமைதியாக செல்கிறோம். டிரம்ப் சென்ற பிறகு போலீஸ் பேச்சை நாங்கள் கேட்கமாட்டோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.

delhi-riot-01

காலை 11 மணி அளவில் சிஏஏ எதிர்ப்பு மற்றும் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கல்வீசி தாக்குதல் உள்ளிட்ட வன்முறையில் இறங்கின. பிற்பகல் 2 மணி அளவில் பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. மாலையில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலில் போலீஸ் ஒருவர் உள்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு மாதத்துக்கும் மேலாக எந்த வித சிறு வன்முறையுமின்றி நடந்து வந்த போராட்டம் ஒரே நாளில் சீர்குலைக்கப்பட்டது. இந்த கலவரத்துக்குக் காரணம் பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ராதான் என்று பலரும் குற்றம்சாட்டுகின்றனர். போலீஸ் கமிஷனர் முன்னிலையிலேயே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய கபில் மிஸ்ராவை உடனடியாக கைது செய்து, டெல்லியில் அமைதியைக் கொண்டுவர வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.