டெல்லி வன்முறை தாக்குதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் 

 

டெல்லி வன்முறை தாக்குதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் 

கடந்த மாதம்  ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் பற்றி எரிய ஆரம்பித்தது.

கடந்த மாதம்  நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் பற்றி எரிய ஆரம்பித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீச்சுகளை வீசினர். இருப்பினும் போராட்டம் ஓய்ந்த பாடில்லை. இதனால் 144 சட்டம் பிறப்பிக்கப்பட்டது.  தடையை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை ஒரு காவலர் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

reporters

டெல்லி போலீஸ் என்பது டெல்லி மாநில அரசு கட்டுப்பாட்டில் இல்லை, முழுக்க முழுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் வடகிழக்கு டெல்லியில் பற்றி எரியும் வன்முறை குறித்த செய்திகளை சேகரிக்கச் சென்ற  செய்தியாளர்கள் மீது காவல்துறையினரும், குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காயமடைந்த 2 செய்தியாளர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த இரு செய்தியாளர்களில் ஒருவர் ஜேகே 24X7 நியூஸ் நிறுவனத்தையும், மற்றொருவர் NDTV செய்தி நிறுவன செய்தியாளர் என்பது தெரியவந்துள்ளது.