டெல்லி வன்முறைக்கு நிதியுதவு… வன்முறையில் ஈடுபட்டவர்களில் 300 பேர் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் – அமித்ஷா!

 

டெல்லி வன்முறைக்கு நிதியுதவு… வன்முறையில் ஈடுபட்டவர்களில் 300 பேர் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் – அமித்ஷா!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் கடந்தவாரம் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லியில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளத . டெல்லி வன்முறைகள் முடிந்து 2 வாரங்களான நிலையில் டெல்லி வன்முறை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தான் வாய்திறந்துள்ளார். 

amitshah

இதுகுறித்து மக்களவையில் பேசிய அமித்ஷா, “டெல்லியில் ஏற்பட்ட வன்முறையின் காவல்துறை சிறப்பாக பணியாற்றியது. அதற்காக பாராட்டுக்கள். உத்தரபிரதேசத்தை சேர்ந்த 300 பேருக்கு டெல்லி வன்முறையில் தொடர்புடையது தெரியவந்துள்ளது. டெல்லி வன்முறைக்கு நிதியுதவி அளித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடகிழக்கு டெல்லியில் பிப்.25க்கு பின் எந்தவிதமான வன்முறையும் பதிவாகவில்லை. டெல்லி வன்முறையில் ஒரு தரப்பினர் பாதிக்கப்பட்டதாக கூறுவது தவறு; இரு மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரங்களை அரசியலாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனக் கூறினார்.