டெல்லி ராஷ்டிரபதி பவனில் உள்ள ‘மொகல் தோட்டம்’ இந்த தினங்களில் மூடப்படும்!

 

டெல்லி  ராஷ்டிரபதி பவனில் உள்ள ‘மொகல் தோட்டம்’ இந்த தினங்களில் மூடப்படும்!

டெல்லி ராஷ்டிரபதி பவனில் உள்ள முகலாய பாணியிலான கட்டிடக்கலை மூலம் ஈர்க்கப்பட்ட முகலாய தோட்டம் அனைத்து இயற்கை ஆர்வலர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும்.

டெல்லி ராஷ்டிரபதி பவனில் உள்ள முகலாய பாணியிலான கட்டிடக்கலை மூலம் ஈர்க்கப்பட்ட முகலாய தோட்டம் அனைத்து இயற்கை ஆர்வலர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். இங்கு முகலாய தோட்டங்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, செவ்வக தோட்டம், நீண்ட தோட்டம், வட்ட தோட்டம், மூலிகை தோட்டம், ஆன்மீக தோட்டம், இசை தோட்டம் என 13 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

rt

இந்த தோட்டத்தை காட்டுமின்றி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். இந்த தோட்டம் முழுவதும் பல வகையான வண்ண மலர்கள் வைக்கப்பட்டுள்ளது. அவை பார்ப்போரின் கண்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. 

ttn

இந்நிலையில், ராஷ்டிரபதி பவனின் முகலாய தோட்டங்கள் வரும் பிப்ரவரி 24 மற்றும் பிப்ரவரி 25 ஆகிய தேதிகளில் மூடப்படும் என்றும் பிப்ரவரி 26 அன்று 11:00 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.