டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

 

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50லிருந்து 67ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 5 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 

coronavirus

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் தமிழகத்திலிருந்து 1500 பேர் பங்கேற்ற நிலையில் 981 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மீதமுள்ள விவரங்களை சேகரித்து அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, ஈரோடு, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.