டெல்லி போலீஸ் மீது எஃப்.ஐ.ஆர்… – ஜாமியா பல்கலை துணை வேந்தர் உறுதி!

டெல்லி போலீஸ் மீது எஃப்.ஐ.ஆர்… – ஜாமியா பல்கலை துணை வேந்தர் உறுதி!

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்துக்குள் அனுமதி இன்றி நுழைந்த டெல்லி போலீசார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக் கழக துணை வேந்தர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

jamia miliya

கடந்த டிசம்பர் 15ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறவே, ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைக் கழக வளாகத்துக்குள் நுழைந்தனர். இதைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்த டெல்லி போலீசார் கண்ணில்பட்டவர்கள் மீது எல்லாம் பயங்கர தாக்குதல் நடத்தினர். பலர் படுகாயம் அடைந்தனர். ஒரு மாணவருக்குக் கண் பார்வை பறிபோனது.

najma

இந்த நிலையில், பல்கலைக் கழகம் இன்று திறக்கப்பட்டது. பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் துணை வேந்தர் நெஜ்மா அக்தர் பேசினார். அப்போது அவர், “பல்கலைக் கழகத்துக்குள் டெல்லி போலீசார் அனுமதியின்றியே நுழைந்தனர். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதற்கான சட்டப் போராட்டம் நாளை முதல் தொடங்கும்” என்றார். துணை வேந்தரின் இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.