டெல்லி – பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை!

 

டெல்லி – பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு – டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

டெல்லி – பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை!

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு சீசனில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 3 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. அதேபோல் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானதும் 4 போட்டிகளில் 3 போட்டியில் வென்றுள்ளது. ஒட்டுமொத்த ஐபிஎல் சீசனில் இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 போட்டிகளிலும், டெல்லி கேப்பிடல்ஸ் 8 போட்டிகளிலும் வென்றுள்ளது. ஒரு போட்டியானது டிராவில் முடிந்துள்ளது.

டெல்லி – பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை!

அதேபோல் தற்போது ஐபிஎல் சீசனில் புள்ளி பட்டியலில் டெல்லி அணி 2 ஆம் இடத்திலும், பெங்களூரு அணி 3 ஆம் இடத்திலும் உள்ளது. முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ள நிலையில் சென்னை அணி நேற்றைய அபார வெற்றியால் கடைசி இடத்திலிருந்து முன்னேறி 6 ஆவது இடத்திற்கு வந்துள்ளது.