டெல்லி பர்னிச்சர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து! பெரும் பொருட் சேதம்! மெட்ரோ ரயில் சேவை முடங்கியது…..

 

டெல்லி பர்னிச்சர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து! பெரும் பொருட் சேதம்! மெட்ரோ ரயில் சேவை முடங்கியது…..

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலையில் பர்னிச்சர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் டெல்லியில் மெஜந்தா லைனில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

 

பர்னிச்சர் மார்க்கெட்டெல்லியில் கலிந்தி கஞ்ச் மெட்ரோ நிலையத்தின் அருகே பிரபலமான பர்னிச்சர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை வேளையில் அந்த பர்னிச்சர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

17 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான  பொருட்கள் சேதம் அடைந்து இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த தீ விபத்தில் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. 

டெல்லி தீயணைப்பு சேவைகள் இயக்குனர் அதுல் கார்க் இது குறித்து கூறுகையில், ‘பர்னிச்சர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து எங்களுக்கு அதிகாலை 5.55 மணிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக 17 தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‘ என்று கூறினார்.

மெட்ரோ ரயில்

பர்னிச்சர் மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டத்தையடுத்து மெஜந்தா லைனில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘ஷாஹீன் பாக் முதல் பொட்டனிக்கல் கார்டன் வரை ரயில்கள் இயக்கப்படவில்லை. தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகே அந்த பகுதியில் ரயில்கள் இயக்கப்படும்‘ என்று கூறினர்.