டெல்லி தப்ளிக் ஜமாத் கூட்டம் தாலிபான் தாக்குதலைப் போன்றது! – மத்திய அமைச்சர் விமர்சனம்

டெல்லி தப்ளிக் ஜமாத் கூட்டம் தாலிபான் தாக்குதலைப் போன்றது! – மத்திய அமைச்சர் விமர்சனம்

டெல்லியில் கடந்த மார்ச் மாதம் 8 முதல் 15ம் தேதி வரை நடந்த தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தற்போது செய்திகள் வைரலாக பரவி வருகின்றன.

தப்ளிப் ஜமாத் கூட்டம் தாலிபான் தாக்குதலைப் போன்றது என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கடந்த மார்ச் மாதம் 8 முதல் 15ம் தேதி வரை நடந்த தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தற்போது செய்திகள் வைரலாக பரவி வருகின்றன.

delhi-tapliq-jamad

இந்தியாவில் கொரொனா பாதிப்புக்கு அந்த மாநாடுதான் காரணம் என்ற அளவில் சமூக ஊடகங்களில் மிகக் கடுமையான கருத்து பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு திரும்பத் திரும்ப கூறிவந்த நேரத்தில் இந்த மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க வெளிநாடுகளிலிருந்து பலரும் வந்ததாகவும் அவர்கள் மூலமாக கொரோனா பரவியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

delhi-tapliq

இந்த நிலையில் இந்த மாநாடு குறித்து மத்திய அமைச்சரும் பா.ஜ.க மூத்த தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தப்ளிக் ஜமாத் செய்திருப்பது தாலிபான்கள் செய்தது போன்ற ஒரு கிரிமினல் குற்றம். இந்த குற்றவியல் நடவடிக்கையை மன்னிக்க முடியாது. இவர்கள் பல மக்களின் வாழ்க்கையை மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு சென்றுவிட்டுவிட்டனர். அரசின் உத்தரவை மீறிய இந்த அமைப்பினர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். மார்ச் 24ம் தேதிதான் முழு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.