டெல்லி ஜே.என்.யு தாக்குதலுக்கு எதிர்ப்பு… நாடு முழுவதும் வெடிக்கும் மாணவர் போராட்டம்!

டெல்லி ஜே.என்.யு தாக்குதலுக்கு எதிர்ப்பு… நாடு முழுவதும் வெடிக்கும் மாணவர் போராட்டம்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மர்ம நபர்கள் நுழைந்து மாணவர்கள், பேராசிரியர்கள் எனக் கண்ணில் பட்டவர்கள் மீது எல்லாம் தாக்குதல் நடத்தியது. மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷை தேடிய அந்த கும்பல், கடைசியில் அவரை கண்டுபிடித்து கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தை பாரதிய ஜனதா கட்சியின் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பு செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மர்ம நபர்கள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மர்ம நபர்கள் நுழைந்து மாணவர்கள், பேராசிரியர்கள் எனக் கண்ணில் பட்டவர்கள் மீது எல்லாம் தாக்குதல் நடத்தியது. மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷை தேடிய அந்த கும்பல், கடைசியில் அவரை கண்டுபிடித்து கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தை பாரதிய ஜனதா கட்சியின் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பு செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

jnu-attack

இது குறித்து ஜே.என்.யு பேராசிரியர்கள் கூறுகையில், “முகமூடி அணிந்தவர்கள் பல்கலைக் கழக வளாகத்தில் பயங்கரவாத செயல்களை கட்டவிழ்த்தபோதும், வளாகத்திலிருந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்” என்றனர்.

jnu-attack

நேற்று இரவு டெல்லி இந்தியா கேட் பகுதியில் திரண்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.பி.வி.பி-க்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பிய அவர்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதுடன், ஏ.பி.வி.பி-யை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் காரணமாக பல்கலைக் கழகம், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனவரி முதல் வாரத்தில்தான் கல்லூரி, பல்கலைக் கழகம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில், ஜே.என்.யு மாணவர்கள் மீது தாக்கல் நடத்தியதைக் கண்டித்து, அலிகார், ஐதராபாத் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக் கழக மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராடினர். ஐதராபாத், கல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக் கழக மாணவர்களும் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜே.என்.யு தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழக, கல்லூரி மாணவர்களும் போராட்டங்களில் குதித்துவருகின்றனர். இதனால், நிலைமை மோசமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.