டெல்லி சினிமா தியேட்டர்களை மூட உத்தரவிட்டார் கெஜ்ரிவால்.

 

டெல்லி சினிமா தியேட்டர்களை மூட உத்தரவிட்டார் கெஜ்ரிவால்.

கேரளத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் வரும் மார்ச் 31ம் தேதிவரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருக்கிறது டெல்லி மாநில அரசு.அத்துடன் டெல்லியில் உள்ள அனைத்துத் திரை அரங்குகளையும் மார்ச் 31 வரை மூடும் படியும் கேஜ்ரிவால் உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73 ஆகி இருக்கிறது. டெல்லி மாநில அரசும் மத்திய அரசும் கொரோனாவை எதிர் கொள்ள என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றன என்று நேற்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது.அதனால்,கேரளத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் வரும் மார்ச் 31ம் தேதிவரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருக்கிறது டெல்லி மாநில அரசு.அத்துடன் டெல்லியில் உள்ள அனைத்துத் திரை அரங்குகளையும் மார்ச் 31 வரை மூடும் படியும் கேஜ்ரிவால் உத்தரவிட்டு இருக்கிறார்.

theater-09

இதனால் இந்த மாதம் வெளியாகவிருந்த மூன்றுபடங்கள் மிகவும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இர்ஃபான் கான் நடித்து இருக்கும் ஆங்கிரசே மீடியம் மார்ச் 13ம் தேதியும்,பிரினிதி சோப்ரா,அர்ஜூன் கபூர் நடித்து நீண்டநாட்களாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்கொண்டு இருந்த சந்தீப் அவுர் பிங்க்கி ஃபெரா மார்ச் 20ம் தேதியும்,அக்‌ஷய் குமார் நடித்திருக்கும் பிரமாண்ட படமான சூரியவன்ஷி இந்தமாதம் 24ம் தேதியும் வெளிவர இருந்தன.இந்தப் படங்களின் வெளியீடு தாமதப்படும் என்று தெரிகிறது.