டெல்லி சட்டமன்ற தேர்தல் : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை !

 

டெல்லி சட்டமன்ற தேர்தல் : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை !

டெல்லியில் சட்டமன்ற தேர்தல் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தமாக  62.59% வாக்குகள் பதிவாகி இருந்தன.

டெல்லியில் சட்டமன்ற தேர்தல் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தமாக  62.59% வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தல் நடந்து முடிந்த கையோடு வாக்குப்பதிவு எந்திரம் சீல் வைக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி, 21 மையங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாகவும் பின்னர் எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ttn

டெல்லியில் வாக்காளர் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரத்தின் படி ஆம் ஆத்மி கட்சி 52 இடங்களிலும் பா.ஜ.க 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் இன்னும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியில் முன்னிலை வகிப்பதால் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்று பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.