டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அஜய் மக்கான் திடீர் ராஜினாமா

 

டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அஜய் மக்கான் திடீர் ராஜினாமா

டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அஜய் மக்கான் ராஜினாமா செய்துள்ளார்

டெல்லி: டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அஜய் மக்கான் ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும், கட்சியில் முக்கியப் பொறுப்புகளையும் வகித்த அஜய் மக்கான், டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஏற்றார். இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து மூத்த தலைவர் அஜய் மக்கான் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், டெல்லி காங்கிரஸ் தலைவராக நான் பொறுப்பேற்ற போது, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அன்பான வரவேற்பு இருந்தது. கடினமான நேரங்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் என்னுடன் இருந்தனர். அனைவருக்கும் நன்றி. காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் மற்றும் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கும் எனக்கு ஆதரவு அளித்ததற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திடீரென அஜய் மக்கான் காங்கிரஸ் முக்கியப் பொறுப்பில் இருந்து விலகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தேர்தல் தொடர்பாக முக்கிய பொறுப்புகளை வழங்கவே ராஜினாமா முடிவை காங்கிரஸ் தலைமை செய்யக் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியுடன் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து பேசி வருவதாக தெரிகிறது. ஆனால், அதனை தொடக்கத்தில் இருந்தே வெளிப்படையாக எதிர்த்து வந்தவர் அஜய் மக்கான். இந்நிலையில், அவர் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.