டெல்லி கலவரத்தால் உலக நாடுகளில் இந்தியாவின் நற்பெயருக்கு பாதிப்பு… ராகுல் காந்தி குற்றச்சாட்டு….

 

டெல்லி கலவரத்தால் உலக நாடுகளில் இந்தியாவின் நற்பெயருக்கு பாதிப்பு… ராகுல் காந்தி குற்றச்சாட்டு….

வடகிழக்கு டெல்லி கலவரத்தால் உலக நாடுகளில் இந்தியாவின் நற்பெயர் பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் 2 தனி பிரதிநிதிகள் குழு, கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் வேறு வேறு பகுதிகளுக்கு சென்று நேற்று பார்வையிட்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான ஒரு பிரதிநிதிகள் குழு பிரிபுரி பகுதியில் கலவரத்தின் போது தீ வைத்து நாசமாக்கப்பட்ட 32 ஆண்டுகள் பழமையான பள்ளியை சென்று பார்வையிட்டனர்.

காங்கிரஸ் பிரதிநிதிகள்

அப்போது ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுதான் (பள்ளி) இந்தியாவின் எதிர்காலம். வெறுப்பு மற்றும் வன்முறையால் இது எரிக்கப்பட்டுள்ளது. இதனால் யாரும் பலன் அடையவில்லை. வன்முறை மற்றும் வெறுப்பு முன்னேற்றத்தின் எதிரிகள். இந்தியா பிளவுப்பட்டு, எரிக்கப்படுகிறது. இது மக்கள் மற்றும் பாரத மாதாவுக்கும் பலன் அளிக்காது. 

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ராகுல் காந்தி

இந்தியாவை ஒன்றிணைப்பதன் மூலம் மட்டுமே தேசம் முன்னேற முடியும் என்பதால் மக்கள் அன்போடு ஒன்றிணைந்து மற்றும் நாட்டுக்காக உழைக்க வேண்டும். இந்தியாவின் தலைநகரில் வன்முறை இருக்கும்போது, அப்புறம் உலகநாடுகளில் நாட்டின் நற்பெயரை பாதிக்கிறது. இந்தியாவின் பலமான சகோரத்துவம், ஒற்றுமை மற்றும் அன்பு இங்கு எரிக்கப்பட்டது. இது போன்ற அரசியலால் பள்ளி மட்டும் பாதிக்கப்படவில்லை, இந்துஸ்தான் மற்றும் பாரத் மாதாவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகத்தில் நமது மரியாதை எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியம் ஆனால் அது இங்கு எரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.