டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் : முதல்வர்

 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் : முதல்வர்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடியனூத்து என்னும் கிராமத்தில்  8.61 ஹெக்டர் பரப்பளவில் புதிய மருத்துவக் கல்லூரி கட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்தது

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடியனூத்து என்னும் கிராமத்தில்  8.61 ஹெக்டர் பரப்பளவில் புதிய மருத்துவக் கல்லூரி கட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்தது. அதன் படி அந்த இடத்தில் ரூ. 325 கோடி மதிப்பில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். அந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ttn

அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களைச் சிந்தாமல் சிதறாமல் நிறைவேற்றி வருவதாகவும், தமிழகத்தில் ஏழை என்ற சொல் இருக்கக் கூடாது என்ற இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலும், மதுரை மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைப் போல மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையும் உருவாக உள்ளதால் மதுரை மக்கள் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.