டெல்லி ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி…. முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..

 

டெல்லி ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி…. முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..

ஊரடங்கு அல்லது முடக்கத்தால் வேலையில்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் டெல்லி ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட மக்கள் சேவை வாகன டிரைவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க அந்த யூனியன் பிரதேசத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சி செய்து வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ளது ஊரடங்கு அல்லது முடக்கத்தால் டெல்லியில் தொழிலாளர்கள் வேலையில்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். வேலை போக முடியாதால் பல தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை எப்படி கழிப்பது என்ற கவலையில் உள்ளனர்.

கட்டுமான தொழிலாளர்கள்

இந்த சூழ்நிலையில், டெல்லி அரசு அண்மையில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம்  நிதியுதவி வழங்கியது. ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் டெல்லியின் ஆட்டோ, டாக்சி, இ ரிக்ஷா, கிராமின் சேவா, ஆ.டி.வி. மற்றும் இதர வாகனங்கள் உள்பட மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்த வாகனங்களின் டிரைவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

டிரைவர்கள்

இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், மக்கள் சேவை வாகனங்களின் டிரைவர்களுக்கு நிதியுதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். நகரத்தில் எந்தவொரு நபரும் பட்டினியை எதிர்கொள்ள கூடாது என்பதை உறுதி செய்வேன் மற்றும் அடுத்த 7 முதல் 10 நாட்களில் பொது சேவை வாகனங்களின் டிரைவர்களின் வங்கி கணக்கில் நிதியுதவி செலுத்தப்படும். தொற்று நோயான கொரோனா வைரஸால் உலகமும் நாடும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.