டெல்லி அணியை வீழ்த்தியது ஹைதராபாத் அணி: பட்டியலில் தொடர்ந்து முதலிடம்!

 

டெல்லி அணியை வீழ்த்தியது  ஹைதராபாத் அணி: பட்டியலில் தொடர்ந்து முதலிடம்!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

புதுடெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

dc

ஐ.பி.எல் தொடரின் 16-வது லீக்  போட்டியில்  சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேற்று மோதின. டெல்லியில்  நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ்வென்ற  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

dc

தொடக்க ஆட்டக்காரரான களமிறங்கிய பிருத்வி ஷா 11  ரன்களிலும்,  தவான் 12 ரன்களிலும், திவாதியா இங்கிராம் தலா 5  ரன்களிலும் ஆட்டமிழக்க டெல்லி அணி தடுமாற்றத்தைச் சந்தித்தது. ஆனால் நிதானமாக ஆடிய,  ஸ்ரேயாஸ்  43ரன்கள் எடுத்தார்.  இறுதியில்  டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது

dc

இதையடுத்து  களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ஆரம்பத்திலேயே தடுமாற்றத்தைக் கண்டது. டேவிட் வார்னர் 10 ரன்களிலும், விஜய் சங்கர் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மனிஷ் பாண்டேவும் 10 ரன்களில் ஆட்டமிழந்தது அதிர்ச்சியைக் கொடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ 48 ரன்கள் எடுத்து எடுத்தார். 

dc

அதன்படி  20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் வெற்றி பெற்றது. இதனால் நடைபெற்ற 4 போட்டிகளில் 3இல் வெற்றி பெற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. 

இதையும் வாசிக்க: வேலூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா-நடக்காதா? ஆடு,புலி ஆட்டத்தைத் தொடங்கிய அ.தி.மு.க!