டெல்லியில் 2 நாள் எங்ககிட்ட போலீஸ் கண்ட்ரோலை கொடுங்க… அவங்க அதிசயத்தை நிகழ்த்துவாங்க….கெஜ்ரிவால் நம்பிக்கை

 

டெல்லியில் 2 நாள் எங்ககிட்ட போலீஸ் கண்ட்ரோலை கொடுங்க… அவங்க அதிசயத்தை நிகழ்த்துவாங்க….கெஜ்ரிவால் நம்பிக்கை

டெல்லியில் 2 நாள் போலீஸ் கட்டுபாட்டை எங்களிடம் கொடுங்க அவங்க அதிசயத்தை நிகழ்த்துவாங்க என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து கெஜ்ரிவாலிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. டெல்லி போலீசார் தொடர்பான கேள்விக்கு அவர் கூறியதாவது: டெல்லி போலீசாரை குறை கூறுவது நியாயமாகாது. மேலிருந்து என்ன உத்தரவு வருகிறதோ அதைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். 

டெல்லி போலீஸ்

போலீஸ் கட்டுபாட்டை எங்களிடம் 2 நாள் கொடுங்க, அதற்கான பலனை நீங்க பார்ப்பீர்கள். நான் டெல்லி போலீசை குற்றம் சொல்ல மாட்டேன்.  அவர்கள் மிகவும் திறமைசாலிகள். அவர்கள் நகரக்கூடாது என்று மேலே (மத்திய அரசு) இருந்து உத்தரவு பெறுகிறார்கள். அவர்களை சுதந்திரமாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும். நேர்மையான அரசின் கீழ் வேலைசெய்யும் பணியாளர்கள் அதிசயங்களை நிகழ்த்துவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தல்

டெல்லியில்  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் ஆயுட்காலம் பிப்ரவரி 22ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 11ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். எதிர்வரும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி தொடர்ந்து 2வது முறையாக ஆம் ஆத்மி அரசு ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன.