டெல்லியில் மந்தமான வாக்குப்பதிவு… 4.33 சதவிகிதமே பதிவு!

டெல்லியில் மந்தமான வாக்குப்பதிவு… 4.33 சதவிகிதமே பதிவு!

டெல்லியில் ஆட்சியைப் பிடிப்பது என்பது காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளின் கவுரவப் பிரச்னை. ஆம் ஆத்மி வருகைக்குப் பிறகு காங்கிரஸ் காணாமல் போனது. தற்போது டெல்லி தேர்தல் என்பது ஆம் ஆத்மிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே நடக்கும் போட்டியாக மாறிவிட்டது.

டெல்லி சட்டமன்ற தேர்தல் இன்று காலை தொடங்கி மந்தமாக நடந்து வருகிறது. காலை 10  மணி நிலவரப்படி 4.33 சதவிகிதமே பதிவாகி உள்ளது.

delhi election.jpg3

டெல்லியில் ஆட்சியைப் பிடிப்பது என்பது காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளின் கவுரவப் பிரச்னை. ஆம் ஆத்மி வருகைக்குப் பிறகு காங்கிரஸ் காணாமல் போனது. தற்போது டெல்லி தேர்தல் என்பது ஆம் ஆத்மிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே நடக்கும் போட்டியாக மாறிவிட்டது.

டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் இன்று காலை தொடங்கியது. மக்கள் காலை முதலே  நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 10 மணி நிலவரப்படி 4.33 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் உள்ளிட்டவர்கள் வாக்களித்துள்ளனர்.

delhi election.jpg1

மொத்தம் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. 1.46 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இதற்காக 13,750 வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 11ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.