டெல்லியில் போதைப்பொருளை அள்ளிய போலீஸ் …கோக் குடிப்பதுபோல கோகோயின் அடிக்கும் கூட்டம் ..

 

டெல்லியில் போதைப்பொருளை அள்ளிய போலீஸ் …கோக் குடிப்பதுபோல கோகோயின் அடிக்கும் கூட்டம் ..

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து சனிக்கிழமை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்க்கு  வந்த வெளிநாட்டவரை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். டெல்லி விமான நிலையத்தில் சுங்க பரிசோதனைக்காக ,பயணிகள்  வெளியே  வருகையில் இரண்டு சேனல் முறை பின்பற்றப்பட்டுள்ளது, இதன் கீழ் க்ரீன் சேனல் வழியாக வரும் பயணிகளுக்கு எந்தவிதமான சோதனைகளும் இல்லை,

டெல்லி விமான நிலையத்தில் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகோயின் வைத்திருந்ததாக பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . 
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து சனிக்கிழமை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்க்கு  வந்த வெளிநாட்டவரை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். டெல்லி விமான நிலையத்தில் சுங்க பரிசோதனைக்காக ,பயணிகள்  வெளியே  வருகையில் இரண்டு சேனல் முறை பின்பற்றப்பட்டுள்ளது, இதன் கீழ் க்ரீன் சேனல் வழியாக வரும் பயணிகளுக்கு எந்தவிதமான சோதனைகளும் இல்லை, அதே சமயம் ரெட் சேனல் வழியாக வருபவர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு சுங்க வரி போடப்படும்.

cocaine

அப்படி ரெட் சேனல் வழியாக வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவரின் பெட்டியை  சோதனை போட்டதில், சுமார் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,915 கிராம் கோகோயின், மூன்று பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்து அதை கைப்பற்றி அந்த நபரை கைது செய்தனர். போதைப் பொருட்கள் (என்.டி.பி.எஸ்) சட்டத்தில்  கைது செய்யப்பட்ட  அந்த நபரிடமிருந்து  இந்த கோகோயின் கைப்பற்றப்பட்டுள்ளது என்று சுங்க அதிகாரி தெரிவித்தார்.