டெல்லியில் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி

 

டெல்லியில் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு தொடர்ந்து 3 கட்டங்களாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 54 நாட்கள் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு தொடர்ந்து 3 கட்டங்களாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 54 நாட்கள் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியது. இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மே 31ம் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து லாக்டவுன் 4.0 நடைமுறைப்படுத்தியுள்ளது. அதேசமயம், 4ம் கட்ட ஊரடங்குக்கான விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. முடிதிருத்த கடைகள் திறப்பது, மாநிலத்துக்குள் பொது போக்குவரத்து இயக்குவது போன்ற விவகாரங்களில் மாநில அரசே முடிவு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. 

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில் டெல்லியில் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. பேருந்துகளில் 20 பேர், ஆட்டோவில் ஒருவர், டாக்ஸியில் 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சலூன் கடைகள், அழகு நிலையங்களுக்கான தடை தொடரும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ளூர் தொழிலாளர்களை பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை தொடங்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். பயிற்சிக்காக விளையாட்டு அரங்குகள் திறக்கலாம், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் டெல்லியில் 100% பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது