டெல்லியில் கடும் மூடுபனி : விமான சேவை, ரயில் சேவை பாதிப்பு.. பயணிகள் அவதி !

 

டெல்லியில் கடும் மூடுபனி : விமான சேவை, ரயில் சேவை பாதிப்பு.. பயணிகள் அவதி !

இன்று நள்ளிரவு முதல் விமானங்களை இயக்க முடியாமல் இந்திரா காந்தி விமான நிலையத்தில், 46 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு மற்றும் மூடுபனி நிலவி வருகிறது. இதனால், சாலை போக்குவரத்துக்கு அப்பகுதிகளில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதே போல, வான்வழி சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் விமானங்களை இயக்க முடியாமல் இந்திரா காந்தி விமான நிலையத்தில், 46 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

ttn

அதுமட்டுமில்லாமல் வட மாநிலங்களுக்கு வரும் 17 ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்துள்ளன. மூடுபனி காரணாமாக வான்வழி சேவையும், ரயில் சேவையும் முற்றிலுமாக முடக்கப்படவில்லை என்றாலும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மூடுபனி குறித்து அனைத்து விமான நிலையங்களும் அதன் பயணிகளுக்கு வான்வழி சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்று தகவல் அனுப்பியுள்ளது. 

ttn

இது குறித்து இண்டிகோ விமான நிலையம் அதன் ட்விட்டர் பக்கத்தில், ” டெல்லியில் மோசமான வானிலை மற்றும் விமான போக்குவரத்து நெரிசல் காரணமாக இன்று விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமானிகளின் தாமதமான நேரம் குறித்து எங்கள் இணையத்தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்று பதிவிட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்ததால் நூற்றுக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.