டெல்லியிலிருந்து நடந்தே தனது சொந்தவூருக்கு சென்ற கூலி தொழிலாளர் நெஞ்சுவலியால் மரணம்

 

டெல்லியிலிருந்து நடந்தே தனது சொந்தவூருக்கு சென்ற கூலி தொழிலாளர் நெஞ்சுவலியால் மரணம்

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கம் நடைமுறையில் உள்ளது.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கம் நடைமுறையில் உள்ளது. சொந்த மாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக வேறு மாநிலங்களில் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது இந்த முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோரோனா வைரஸ் மற்றும் முடக்கத்தால் நிறுவனங்கள் மூடப்பட்டதால் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும் கைகளில் பணம் இல்லாததால் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர்.

சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள்

இந்நிலையில் டெல்லியிலுள்ள தனியார் உணவகத்தில் ஹோம் டெலிவரி பையனாக பணிபுரிந்து வந்த ரன்வீர் சிங்,  மத்திய பிரதேசத்திலுள்ள மொரோனா மாவட்டத்திற்கு நடந்தே சென்றுள்ளார். டெல்லி- ஆக்ரா நெடுஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையிலேயே மயங்கி விழுந்தார். அருகிலிருந்த கடைக்காரர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.