டெல்லியின் புதிய எம்எல்ஏக்கள் மீது பாலியல் வன்கொடுமை உள்பட கிரிமினல் வழக்குகள்… அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!

 

டெல்லியின் புதிய எம்எல்ஏக்கள் மீது பாலியல் வன்கொடுமை உள்பட கிரிமினல் வழக்குகள்… அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!

பாஜக 8 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் 3வது முறையாக  ஆம் ஆத்மி கட்சி கட்சி டெல்லியை கைப்பற்றியுள்ளது.

டெல்லி சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்து முடிந்த  70 தொகுதிகளுக்கான  வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி  62  இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் 3வது முறையாக  ஆம் ஆத்மி கட்சி கட்சி டெல்லியை கைப்பற்றியுள்ளது.

ttn

இந்நிலையில்  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 43 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள்  உள்ளதாகவும், அதில் 37 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி  போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அடங்கும் என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

tn

இந்த அறிக்கையானது தேர்தலின் போது  வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்ட விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்துள்ளதாக தெரிகிறது.  மிக தீவிர குற்ற வழக்குகள் கொண்ட எம்.எல்.ஏக்களில் 13 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் இருப்பதும் அதில் ஒருவர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டெல்லி சட்டப்பேரவை எம்.எல்.ஏக்களில் 24 பேர் மீது  இதுபோன்ற கிரிமினல் வழக்குகள் இருந்ததாம். 

ttn

அதேபோல் சொத்து விவரங்களை பொறுத்தவரையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 45 பேரும், பாஜக எம்.எல்.ஏக்கள் 7 பேரும் தங்களுக்கு  ஒரு கோடிக்கு மேல் சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்  என்றும்  ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களின் 62 பேரின்  சராசரி சொத்து மதிப்பு ரூ.14.96 கோடி என்றும்  8 பாஜக எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 9.10 கோடி என்றும்  அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்.கே.புரம் எம்.எல்.ஏ தரம்பால் லக்ரா 292 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பணக்கார எம்எல்ஏ -ஆகவும், மங்கோல்புரி எம்.எல்.ஏ ராக்கி பிர்லா  76,000 ரூபாய் சொத்து மதிப்புடன்  வசதி குறைந்த எம்எல்ஏவாகவும் உள்ளார் என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்  வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.