டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

 

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்

ஒடென்சி (டென்மார்க்): டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் அமெரிக்காவின் பீவென் ஜாங்குடன் மோதிய இந்தியாவின் பி.வி.சிந்து, 17-21, 21-16, 18-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். அதேபோல், மற்றொரு ஆட்டத்தில் விளையாடிய சாய்னா நேவால், ஹாங்காங் வீராங்கனையான செங் நகன் யுயை எதிர்கொண்டார். அந்த ஆட்டத்தில், 20-22, 21-17, 24-22 என்ற செட் கணக்கில் சாய்னா நேவால் போராடி வெற்றி பெற்றார்.

இதையடுத்து, காலிறுதி போட்டிக்கு முன்னேரியவ் சாய்னா, ஜப்பானின் நசோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். அந்த போட்டியில் 17-21, 21-16, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சாய்னா, அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், உலக தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங்க் உடன் அரை இறுதியில் சாய்னா விளையாடினார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 21-11, 21-12 என்ற செட் கணக்கில் கிரிகோரியாவை வீழ்த்தி சாய்னா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இறுதி போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடம் வகிக்கும் தாய் சூ யிங் உடன் சாய்னா விளையாட இருக்கிறார்