டென்மார்க்கிலும் குடியேறிய கொரோனா வைரஸ் – இத்தாலியில் இருந்து திரும்பிய பயணி காரணம்

 

டென்மார்க்கிலும் குடியேறிய கொரோனா வைரஸ் – இத்தாலியில் இருந்து திரும்பிய பயணி காரணம்

டென்மார்க் நாட்டில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோபன்ஹஜன்: டென்மார்க் நாட்டில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடக்கு இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியத்தில் விடுமுறையில் கொண்டாடி விட்டு டென்மார்க் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அந்நாட்டு சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த நபர் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவரது மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

ttn

நாங்கள் இந்த சூழ்நிலையை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். அதை கண்டுபிடிக்கும் மற்றும் கண்காணிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன” என்று சுகாதார அமைச்சர் மேக்னஸ் ஹியூனிக் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இது டென்மார்க் நாட்டின் பாதுகாப்பு நிலையை மாற்றாது. ஆனாலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கிறோம் என்று டென்மார்க் சுகாதார ஆணையம் கூறியுள்ளது.