டென்னிஸ் வீரர் ‘ஆண்டி முர்ரே’வுக்கு ‘ஸர்’பட்டம் கொடுத்து கவுரவித்திருக்கிறது இங்கிலாந்து அரசு! 

டென்னிஸ் வீரர் ‘ஆண்டி முர்ரே’வுக்கு ‘ஸர்’பட்டம் கொடுத்து கவுரவித்திருக்கிறது இங்கிலாந்து அரசு! 

இங்கிலாந்தின் டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரேக்கு நாட்டின் உயரிய விருதான ‘ஸர்’ பட்டம் வழங்கப்பட்டது.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பிறந்த ஆண்டி முர்ரே 2005 ஆண்டு முதல் தொழில்முறை டென்னிஸ் வீரராக விளையாடி வருகிறார்.

andy murray

ஆஸ்த்திரேலிய ஓப்பனில் 5 முறையும், ஃபிரஞ்ச் ஓப்பனில் ஒரு முறையும் ஃபைனலுக்கு வந்தாலும் பட்டம் வென்றதில்லை.ஆனால்,2012 அமெரிக்கன் ஓப்பனிலும், 2013 விம்பிள்டனிலும் பட்டம் வென்றிருக்கிறார்.

அதில் யூ.எஸ் ஓப்பனில் 1977-க்கு பிறகு நுழைந்த இங்கிலாந்து ஆட்டக்காரர். 1936- க்கு பிறகு யூ.எஸ் ஓப்பனில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இங்கிலாந்துக்காரர் ஆகிய இரண்டு சாதனைகளை செய்திருக்கிறார்.

கோடை ஒலிம்பிக் லண்டன் 2012 ,ரியோ டி ஜெனிரோ 2016 பட்டங்களையும் வென்றிருக்கிறார். இப்போது  217-வது ரேங்க் வகித்தாலும் 2016-ல் அவர்தான் நம்பர் ஒன்.இனி அவர் ஸர் ஆண்ட்ரூ பாரோம் முர்ரே!