டெண்டர் முறைகேடு வழக்கு: முதல்வர் பழனிசாமி மீதான சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

 

டெண்டர் முறைகேடு வழக்கு: முதல்வர் பழனிசாமி மீதான சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

டெண்டர் முறைகேடு வழக்கில் முதல்வர் பழனிசாமி மீதான சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

டெல்லி: டெண்டர் முறைகேடு வழக்கில் முதல்வர் பழனிசாமி மீதான சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி முறைகேடு நடந்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதல்வர் மீதான முறைகேடு புகார் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல், முதல்வர் பழனிசாமி தரப்பிலும் தனிப்பட்ட முறையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம்,  முதல்வர் பழனிசாமி மீதான சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.