டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு குறைந்துள்ளது: அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்…

 

டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு குறைந்துள்ளது: அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்…

டெங்குகாய்ச்சலை உடனடியாக கவனிக்க நடமாடும் மருத்துவக் குழுக்கள் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் செயல்படும்

டெங்குகாய்ச்சல் பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நாள் தோறும் பல பேர் டெங்குகாய்ச்சலால் தமிழகம் முழுவதும் பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றனர். உயிர்க் கொல்லி நோயான டெங்குவை தடுப்பதற்கு அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் 150 வாகனங்களை கொண்டு நில வேம்பு கசாயத்தை மக்களுக்கு வழங்க முடிவெடுத்து, இன்று அந்த வாகனங்கள் அனைத்தும் சென்னை ஓமந்தூர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டது. 

Dengue

அந்த வாகனங்களை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் துவங்கி கொடியசைத்துத் துவங்கி வைத்தார். அதன் பின்  செய்தியாளர்களிடம் பேசிய விஜய பாஸ்கர், இந்த நிலவேம்பு கசாயங்கள் வழங்கும் வாகனங்கள் தொடர்ந்து 7 நாட்களுக்குச் செயல்படும் என்றும் டெங்குகாய்ச்சலை உடனடியாக கவனிக்க நடமாடும் மருத்துவக் குழுக்கள் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் செயல்படும் என்று கூறியுள்ளார். 

Minister Vijaya baskar

மேலும், சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில், நோயாளிகளை அனுமதிக்க போதுமான படுக்கை வசதிகள் இல்லை என எழுந்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், புதிதாகப் பிரிவுகள் மருத்துவ மனையில் தொடங்கப் பட்டுள்ளன என்றும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சென்னையில் டெங்கு பாதிப்பு குறைவாகத் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.