டெங்கு காய்ச்சல் பிரச்னை தீரும்வரைக்கும் கொஞ்சம் பிரேக் விடமுடியுமா அமித்ஷா ஜி?

 

டெங்கு காய்ச்சல் பிரச்னை தீரும்வரைக்கும் கொஞ்சம் பிரேக் விடமுடியுமா அமித்ஷா ஜி?

டெங்கு காய்ச்சல் பற்றிய விஷயத்தை முதல்வர் மற்றும் மந்திரிகளிடம் எடுத்துச்சென்றால், பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள்? டெங்குவிடம் இருந்து பெங்களூருவைகூட காப்பாற்றலாம், ஆனால் எம்.எல்.ஏக்களை அமித்ஷாவிடம் இருந்து யார் காப்பாற்றுவார்?

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பதுபோல, ஏற்கெனவே அரசியல் குதிரை பேரங்களால் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ. இருக்கிறாரா இல்லை ராஜினாமா செய்துவிட்டாரா, தங்கள் மாநிலத்தின் முதல்வர் யார் இப்போது என்ற கேள்விகளால் தடுமாறிவரும் கர்நாடக அதிகாரிகளை, மேலும் சோதனைக்குள்ளாக்கி வருகிறது டெங்கு கொசுக்கள். நதிகள் பெருக்கெடுக்கும் அளவுக்கும் இந்த முறை மழை பெங்களூருவில் பெய்யாவிட்டாலும், டெங்கு கொசுக்கள் பெருகும் அளவுக்காவது பெய்துவிட்டது. விளைவு, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டிவிட்டது.

Dengue

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மட்டுமல்ல, காய்ச்சலின் தீவிரமும் கூடியிருப்பதாக மருத்துவர்கள் அபாய ஒலி எழுப்புகின்றனர். டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தாலும், மேலிடம் வேறொரு பிரச்னையில் சிக்கியிருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். டெங்கு காய்ச்சல் பற்றிய விஷயத்தை முதல்வர் மற்றும் மந்திரிகளிடம் எடுத்துச்சென்றால், பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள்? டெங்குவிடம் இருந்து பெங்களூருவைகூட காப்பாற்றலாம், ஆனால் எம்.எல்.ஏக்களை அமித்ஷாவிடம் இருந்து யார் காப்பாற்றுவார்?