டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர் கால நடவடிக்கை அவசியம்: ராமதாஸ்..

 

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர் கால நடவடிக்கை அவசியம்: ராமதாஸ்..

ஏற்கனவே டெங்குகாய்ச்சலால் 3 குழந்தைகள் இறந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு குழந்தை இருந்திருப்பது வேதனை அளிக்கிறது

தமிழகத்தில் மழைக் காலம் துவங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே காணப்படும் குப்பை கூளங்களும், தேங்கி நிற்கும் மழை நீரும் கொசுக்கள் உற்பத்திக்குச் சாதகமாக அமைகின்றன. கொடிய வகை வைரஸ் காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சலும் தமிழக மக்களிடையே வேகமாகப் பரவி வருகின்றன. 

 

டெங்குகாய்ச்சல் பரவுவதைத் தடுக்க முடியாமல் தமிழக அரசும், மக்களும் திணறி வருகின்றனர். டெங்குகாய்ச்சலால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கண்டித்து, பாமக கட்சித் தலைவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,’ஏற்கனவே டெங்குகாய்ச்சலால் 3 குழந்தைகள் இறந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு குழந்தை இருந்திருப்பது வேதனை அளிக்கிறது. டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்த போர்க் கால நடவடிக்கை அவசியமாகும் என்று தெரிவித்துள்ளார்.