டெங்கு காய்ச்சலால் சென்னையில் ஆறு வயது சிறுமி உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலால் சென்னையில் ஆறு வயது சிறுமி உயிரிழப்பு!

சென்னை முகப்பேர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆறு வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆறு வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் கவிதா தம்பதியினர். இவர்களது மகளான மகாலட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று காய்ச்சலால் பாதிக்கபட்டு இருந்ததை தொடர்ந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் மகாலட்சுமிக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளித்தனர். தொடந்து சிகிச்சை மேற்கொண்ட நிலையில் 6 வயது குழந்தை மகாலட்சுமி இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் கவிதாவின் மற்றொரு குழந்தை தினேஷ்கும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டுள்ளார். இந்த துயர் சம்பவத்தால் அவர்களது குடும்பத்தார் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

dengue fever

மேலும், இந்த பகுதியில் உள்ள அரசு குடியிருப்புகளில் தேக்கி வைக்கப்படும் குப்பைகளாலும், சாலைகளில் சாக்கடை கழிவுகளை முறையாக அகற்றாதது தான் காரணம் என்று அப்பகுதிவாசிகள் கூறுக்கின்றனர்.