டெங்கு காய்ச்சலால் இரட்டை குழந்தைகள் பலி: சென்னை மக்கள் பீதி!

 

டெங்கு காய்ச்சலால் இரட்டை குழந்தைகள் பலி: சென்னை மக்கள் பீதி!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை  இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை: சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை  இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை மாதவரம் சந்தோஷ்நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் – கஜலட்சுமி தம்பதியின் 7 வயது இரட்டைக் குழந்தைகளான தீக்‌ஷா, தக்‌ஷன் ஆகியோருக்கு ஏற்பட்ட  கடும் காய்ச்சல் காரணமாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ரத்த பரிசோதனையின் போது குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவர்களுக்குத் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலையில் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், ‘காய்ச்சல் வந்த 48 மணி நேரத்திற்குள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும். மழை நீர் மற்றும் பழைய பொருட்களில் தண்ணீர் தேங்காமலும்,தண்ணீர் தேக்க தொட்டிகளை திறந்து வைக்காமலும் இருக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது’ என்றும்  தெரிவித்துள்ளார்.