டெங்குவை தடுக்கும் நடவடிக்கைகள் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

டெங்குவை  தடுக்கும் நடவடிக்கைகள் :  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

டெங்கு பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க  வேண்டும்

டெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்குச்  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் டெங்குவால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும். கட்டுப்படுத்தவும் சுகாதாரத்துறை சார்ந்த நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்கவும், டெங்கு பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க  வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் பொதுநல மனு ஒன்றை  தாக்கல் செய்தார்.

dengue

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது  மனுதாரர் தரப்பில், சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் அடியில்  நீர் தேங்கி அளித்திலிருந்து டெங்கு கொசு உற்பத்தியாகிறது என்று குற்றச்சாட்டினார். இதைக்கேட்ட நீதிபதிகள், நடைபாதைகளை விரிவுபடுத்தியது, வாகனங்களை நிறுத்தவா?  கட்டாய ஹெல்மெட், பிளாஸ்டிக் தடை என் அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை பின்பற்ற வேண்டியது நமது கடமை. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு’ என்றனர். 

தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘டெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசும், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து மாநகராட்சியும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் விசாரணையை வரும் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.